ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்க விலை: பவுன் ரூ.86,000 தாண்டியது!

சென்னையில் தங்க விலை (செப்டம்பர் 29) ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்து சாதனை படைத்துள்ளது. காலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில், மாலை மறுமுறை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.86,160-க்கு விற்பனையாகிறது.

தங்க விலை தினந்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டுக் கொண்டே வருகிறது. காலை 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,700-க்கு, பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.85,600-க்கு விற்பனையானது.

மாலை மீண்டும் விலை உயர்ந்து, கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.10,770-க்கும், பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.86,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் இருமுறை விலை அதிகரித்திருப்பது நுகர்வோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வெள்ளி விலை தற்போது கிராமுக்கு ரூ.160, கிலோவுக்கு ரூ.1,60,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box