ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து: சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு
பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி, பரஸ்பரம் விவாகரத்து பெற சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ், 2013-ம் ஆண்டு தனது பள்ளித் தோழி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், நிரந்தரமாக பிரிய முடிவு செய்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி, 2025-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவில் இருவரும் மனமொத்த பிரிவில் சம்மதித்தனர்.
முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, வழக்கிற்கு சட்டப்படி ஆறு மாத கால அவகாசம் வழங்கியிருந்தார். ஆறு மாதங்கள் முடிந்த பிறகு, செப்டம்பர் 25-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் நேரில் ஆஜராக, விவாகரத்து பெற உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.
குழந்தையை சைந்தவி கவனிப்பதில் எந்த எதிர்ப்பு இல்லாததாகவும் ஜி.வி.பிரகாஷ் நீதிபதியிடம் கூறினார். இதைத் தொடர்ந்து, நீதிபதி செல்வ சுந்தரி, ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவிக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்.