ஐஎல் டி20-ல் தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் சர்வதேச லீக் டி20 (ஐஎல்டி20) தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் இணைந்துள்ளார். இலங்கை வீரர் குஷால் மெண்டிஸுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காகவும் அவர் விளையாடி இருந்தார். அதேவேளையில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

தினேஷ் கார்த்திக் 412 டி20 ஆட்டங்களில் விளையாடி 7,437 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 35 அரைசதங்கள் அடங்கும், ஸ்டிரைக் ரேட் 136.66 ஆகும்.


ஹாக்கியில் இந்தியா வெற்றி

இந்திய ஜூனியர் மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அங்கு கான்பெரா சில் அணிக்கு எதிராக இந்திய இளம் அணி 4-வது ஆட்டத்தில் மோதியது. கான்பெரா நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜூனியர் மகளிர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் இஷிகா 2 கோல்களும், சோனம் 1 கோலும் அடித்தனர். இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாகும். 4 ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. கடைசி ஆட்டம் நாளை (2-ம் தேதி) நடைபெறுகிறது.

Facebook Comments Box