பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் மேல்முறையீடு

முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடாவின் பேரனும், மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33), தனது வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடந்த மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு சாகும் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் அவர் தரப்பில் கூறப்பட்டதாவது:

  • வீட்டு பணிப்பெண் போலீஸாரின் தூண்டுதலால் புகார் அளித்துள்ளார்.
  • பாதிக்கப்பட்ட பெண், 2021 ஜனவரி 1-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறுகிறார்.
  • பின்னர், 2024 மே 10-ம் தேதி, போலீஸார் அந்தப் பெண்ணை பிரஜ்வலின் பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று படுக்கையை காட்டினர். அதில் கறை இருப்பதை குற்றத்துக்கான ஆதாரமாகக் கூறினர்.
  • ஆனால், 3 ஆண்டுகள் கடந்தும் கறை நீங்காமல் இருப்பது சாத்தியமில்லை. எனவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய உயிர்க்கால சிறைத் தண்டனையும் அபராதமும் ரத்து செய்யப்பட வேண்டும்.

இந்த மேல்முறையீட்டு மனு, தசரா விடுமுறைக்கு பின் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box