கட்டிடத் தொழிலாளியிலிருந்து இயக்குநராக உயர்ந்த சுரேஷ் பாரதி – ‘வீர தமிழச்சி’
அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கியுள்ள ‘வீர தமிழச்சி’ படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மாரிமுத்து, வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜூபின் இசையமைத்துள்ளார். மகிழினி கலைக்கூடம் சார்பில் சாரதா மணிவண்ணன் மற்றும் மகிழினி இணைந்து தயாரித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இயக்குநர் சுரேஷ் பாரதி பேசும்போது:
“ஒருகாலத்தில் ரூ.35 சம்பளத்தில் கட்டிடத் தொழிலாளியாக இருந்த நான், இன்று இயக்குநராக நிற்கிறேன். 2016-ல் ‘கொஞ்சம் கொஞ்சமாக’ என்ற குறும்படத்தை இயக்கி, முதல்வரிடம் விருது பெற்றேன். மொத்தம் 18 குறும்படங்கள் இயக்கி, 36 விருதுகள் வென்றுள்ளேன். அதன் பிறகு எழுதப்பட்ட கதையே இந்த ‘வீர தமிழச்சி’. இது பெண்களுக்கான விழிப்புணர்வு படம். நான் சொல்ல நினைத்ததை, சட்ட திருத்தமாக முதல்வர் முன்பே கொண்டு வந்திருப்பது பெருமையாக உள்ளது” என்றார்.