ஹுருன் இந்தியா 2025 – முகேஷ் அம்பானி முதலிடம்
2025-ம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.9.55 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்துள்ளார்.
கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பம் ரூ.8.15 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
இந்தியாவின் பணக்கார பெண் எனும் பெருமையை ரோஷினி நாடார் பெற்றுள்ளார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ.2.84 லட்சம் கோடி என பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் நூறு கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை 350-ஐ கடந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.167 லட்சம் கோடி. நாட்டில் அதிக பில்லியனர்கள் வசிக்கும் நகரமாக மும்பை முதலிடத்தில் உள்ளது.
Facebook Comments Box