‘ஆர்யன்’ டீசர் எப்படி? – மீண்டும் ஒரு ‘ராட்சசன்’ பாணி சைக்கோ த்ரில்லர்!
விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘ஆர்யன் படத்தின்’ டீசர் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் பிரவீன் கே இயக்கியுள்ள படம் ‘ஆர்யன்’. இதில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்ரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? – ‘ராட்சசன்’ படம் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அதே பாணி கதைக்களத்துடன் விஷ்ணு விஷால் களமிறங்கியுள்ளார். இதிலும் போலீஸ் வேடம். பரபரவென செல்லும் காட்சித் துணுக்குகளை டீசரை காட்டினால் கதை இன்னதுதான் என யூகிக்க முடியவில்லை. ‘ராட்சசன்’ போன்ற டோன், சைக்கோ கொலையாளி, அவனை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ் போன்ற விஷயங்களை மட்டும் மேலோட்டமாக புரிந்து கொள்ள முடிகிறது. ‘ராட்சசன்’ போலவே விறுவிறுப்பான திரைக்கதை அமைந்துவிட்டால் விஷ்ணு விஷாலுக்கு இன்னொரு சூப்பர்ஹிட் உறுதி.