தங்கம் விலை குறைவு – வெள்ளி விலை உயர்வு
சென்னையில் இன்று (அக். 2) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்துள்ளது. அதேசமயம், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலைமை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50% இறக்குமதி வரி, உக்ரைன்–ரஷ்யா போர், இஸ்ரேல்–ஹமாஸ் மோதல் போன்ற பல்வேறு காரணங்களால் தங்க விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்தது. ஆனால் இன்று சிறிதளவு சரிவு கண்டுள்ளது.
- சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10,880-க்கும், ஒரு பவுன் ரூ.87,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.616 குறைந்து ரூ.94,952-க்கும்,
- 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,120-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை உயர்வு
வெள்ளிக்கு உற்பத்தி துறைகளில், குறிப்பாக மின்சார உபகரணங்கள் தயாரிப்பில், அதிகப்படியான தேவை உருவாகி வருகிறது. மேலும் பல நாடுகள் முதலீட்டுக்காகவும் வெள்ளி கொள்முதல் செய்து வருகின்றன. இதனால் வெள்ளி விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
- இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.2 அதிகரித்து ரூ.163-க்கும்,
- கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 அதிகரித்து ரூ.1,63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Facebook Comments Box