“நான் வருகிறேன்” – இந்திய பயணத்தை உறுதிப்படுத்திய மெஸ்ஸி!
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தியா ஒரு தனிப்பட்ட நாடு. 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்தபோது கண்ட அனுபவம் என் நினைவுகளில் இன்னும் இருக்கிறது. இந்திய ரசிகர்கள் அற்புதமானவர்கள். கால்பந்து மீது அதிக ஆர்வம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இம்முறை என்னை நேசிக்கும் புதிய தலைமுறை ரசிகர்களை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன். இந்த பயணம் எனக்கு மிகப் பெரும் மதிப்பளிக்கிறது” என மெஸ்ஸி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் மாதம் கேரளாவில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி நட்பு போட்டியில் பங்கேற்கிறது. இதை அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து தனது இந்திய பயணத்தை மெஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், டிசம்பரில் கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி ஆகிய 4 நகரங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். குறிப்பாக, கொல்கத்தாவில் 70 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை மெஸ்ஸி திறந்து வைக்க உள்ளார். மேலும், பல பிரபலர்களையும் சந்திக்க இருக்கிறார்.