நானி – சுஜித் இணைப்பு: புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!
‘ஓஜி’ மூலம் வெற்றியடைந்த இயக்குநர் சுஜித், தற்போது நடிகர் நானியுடன் இணைந்து இயக்கும் புதிய படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கியுள்ளார்.
படப்பூஜை விழாவில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்று, நானி மற்றும் சுஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக பல மாதங்களாகவே இந்த படத்தின் பணிகளை சுஜித் மேற்கொண்டு வந்தார். அதிக செலவு காரணமாக தயாரிப்பாளர் மாற்றப்பட்டு, தற்போது நிகாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பை மேற்கொண்டுள்ளது. படத்துக்கு ‘ப்ளடி ரோமியோ’ என்ற பெயர் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன, ஆனால் படக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுதி இன்னும் வரவில்லை.
நானியுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இப்படம் டார்க் காமெடி வகையில் உருவாகும் என்றும், கதை மிகவும் சவாலானது என சுஜித் கூறியுள்ளார்.