மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 3% அகவிலை உயர்வு – அஷ்வினி வைஷ்ணவ் தகவல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி (Dearness Allowance, DA) உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுவதாவது, இது தசரா பரிசாக அமையும்.

நாட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசியை கணக்கில் கொண்டு, மத்திய அரசு ஆண்டில் இரண்டு முறை – ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் – அகவிலை (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வை அறிவிக்கிறது.

இதற்கு முன்பு, கடந்த ஜனவரி மாதத்துக்கான அகவிலை மார்ச் மாதம் 2% உயர்ந்து, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அடிப்படை சம்பளத்தில் 53% இருந்து 55% ஆக உயர்ந்தது. இந்நிலையில், தற்போதைய அறிவிப்பில் மேலும் 3% உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அடிப்படை சம்பளத்தில் அகவிலை 58% ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்ததாவது, “இந்த அறிவிப்பு தசரா மற்றும் தீபாவளி பரிசாக அமையும். 3% உயர்வு ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும்”.

இந்த அகவிலை உயர்வின் மூலம் சுமார் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன் பெறுவார்கள்.

Facebook Comments Box