இன்று முதல் ஒரே நாளில் காசோலைகள் கிளியர் – ரிசர்வ் வங்கி நடவடிக்கை

அக்.4 முதல் வங்கிகள் காசோலைகளை ஒரே நாளில் கிளியர் செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

புதிய வழிகாட்டுதலின் படி, அக்.4 முதல் அனைத்து வங்கிகளும் காசோலைகளை ஒரே நாளில் கிளியர் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், காசோலைகள் மூலம் பணம் பரிமாற்றம் விரைவாகவும் எளிதாகவும் நடைபெறும். தற்போது காசோலைகள் கிளியர் ஆக இரண்டு நாட்கள் வரை எடுக்கின்றன.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து, HDFC, ICICI போன்ற வங்கிகள், நாளை முதல் வாடிக்கையாளர்களின் காசோலைகள் ஒரே நாளில் கிளியர் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளன. இதனால், காசோலைகள் டெபாசிட் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள் கிளியர் ஆகும்.

இந்த புதிய நடைமுறை இரண்டு கட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அக்டோபர் 4 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 3 வரை முதல் கட்டம், அதன் பின் இரண்டாம் கட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதில், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை காசோலைகளுக்கு பணம் வழங்க உறுதிப்படுத்தும் செயல்முறை நடைபெறும். காசோலை பெற்று வங்கிகள் அதனை ஸ்கேன் செய்து கிளியரிங் மையத்திற்கு அனுப்ப வேண்டும். பின்னர், கிளியரிங் மையம் படத்தை பணம் வழங்கும் வங்கிக்கு அனுப்பி, பணம் வழங்க வேண்டுமா என்பதை உறுதிப்படுத்தும். இதில் காலாவதி நேரம் முன்கூட்டியே வரையறுக்கப்பட்டுள்ளது.

ரூ.50,000-க்கு மேல் தொகை கொண்ட காசோலைகளை கிளியர் செய்யும் முன் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள். இதனால், விவரங்கள் முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டு, சரியானவையாக இருந்தால் காசோலை உரிய நாளில் கிளியர் ஆகும். தவறான விவரங்கள் இருந்தால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, வழங்குபவர் மீண்டும் சரியான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Facebook Comments Box