வெற்றிமாறன் – சிம்பு ப்ரோமோ வெளியீட்டு தேதி மாற்றம்: காரணம் என்ன?

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் ப்ரோமோ வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணி தற்போது வெளிவந்துள்ளது.

இப்படத்தின் ப்ரோமோ இன்று (அக்டோபர் 4) வெளியிடப்படவிருந்தது, ஆனால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றிய தகவலில் தயாரிப்பாளர் தாணு கூறியதாவது, “சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க, சிம்பு மற்றும் வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டத்தை திரையரங்கிலும் சமூக வலைதளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இது ரசிகர்களின் பொறுமைக்கு ஈடாகும். சென்சார் பணிகள் முடிந்தவுடன், விரைவில் அந்த மாபெரும் முன்னோட்டம் உங்கள் கண்முன்னே வெளிவர உள்ளது” என்றார்.

இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதன் காரணம், இப்படத்தின் பின்னணி இசை பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்பதாகும். அனிருத் இப்படத்தின் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். அவருடைய பணிகள் முடித்து, தணிக்கை செய்யப்பட்ட பிறகு அக்டோபர் 16-ம் தேதி ப்ரோமோ வெளியிடப்படும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. அந்த தினம் அனிருத்தின் பிறந்த நாளாகும். இதன் மூலம் ப்ரோமோவில் அனிருத் தான் இசையமைப்பாளராக உள்ளார் என்பதை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

வெற்றிமாறன் – சிம்பு – அனிருத் மூவரும் புதிய கூட்டணி உருவாக்கி உள்ளனர், இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் கதை முழுவதும் வடசென்னை பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சிம்புவுடன் நடிக்கும் மற்ற நடிகர்களை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்

Facebook Comments Box