தங்க விலை உயர்வு: இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று (அக்டோபர் 4) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, தற்போது ஒரு கிராம் ரூ.10,950-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உலகளாவிய பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50% வரி விதித்திருப்பது, ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகரான அளவில் குறைந்திருப்பது, உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஆகிய காரணங்களால் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.10,950-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.87,600-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 உயர்ந்து ரூ.165-ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,000 அதிகரித்து ரூ.1,65,000-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களிலான தங்க விலை நிலவரம் (ஒரு பவுன்):

  • அக்.4 – ரூ.87,600
  • அக்.3 – ரூ.87,200
  • அக்.2 – ரூ.87,600
  • அக்.1 – ரூ.87,600
Facebook Comments Box