நாக் அஸ்வின் இயக்கத்தில் சாய் பல்லவி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்!

‘மஹாநதி’ மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ போன்ற பிரம்மாண்ட படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய இயக்குநர் நாக் அஸ்வின், அடுத்த படத்திற்கான தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

தற்போது ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய பணிகள் தாமதமடைந்துள்ள நிலையில், நாக் அஸ்வின் புதிய கதை ஒன்றை உருவாக்கி வருகிறார். இது முழுக்க நாயகியை மையமாகக் கொண்ட படம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் முன்னணி நடிகை சாய் பல்லவியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர் கதையை கேட்டவுடன் பெரும் உற்சாகத்துடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தையும் ‘கல்கி 2898 ஏடி’யை தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சாய் பல்லவி நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், நாக் அஸ்வின் ‘கல்கி 2898 ஏடி – பகுதி 2’ பணிகளை தொடங்கவுள்ளார். இதில், தீபிகா படுகோன் விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக யார் இணைவார் என்பதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Facebook Comments Box