ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்ந்தெடுக்கப்படுவார்

ஜப்பானில் சனே டகைச்சி, நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) தற்போது ஆளுகிறார்கள். இக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ஷிகெரு இஷிபா, ஓராண்டு கழித்து பதவி விலகுவார் என முன்பே அறிவித்தார். இதற்கிடையில், ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எல்டிபி பெரும்பான்மை இழந்தது. இதனால், பிரதமர் பதவியிலிருந்து கடந்த மாதம் ஷிகெரு ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு, கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே டகைச்சி (64) மற்றும் வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமி போட்டியிட்டனர். கட்சிக்குள் நடைபெற்ற முதல் கட்ட வாக்கெடுப்பில் சனே டகைச்சி வெற்றி பெற்றார்.

உட்கட்சி தேர்தலில், சனே 183 வாக்குகள், கொய்சுமி 164 வாக்குகள் பெற்றனர். இதையடுத்து, சனே டகைச்சி லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவியேற்க இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமராக பதவி ஏற்ற பிறகு, டகைச்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது. ஆனால், கட்சிக்கு பெரும்பான்மை இல்லை, மேலும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்காளர்களின் அதிருப்தியும் உள்ளது. இதுபோன்ற சவால்கள் இருந்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் டகைச்சி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box