பிக் பாஸ் சீசன் 9 தொடக்கம்: போட்டியாளர்களின் முழு பட்டியல் வெளியீடு!

தமிழ் தொலைக்காட்சியின் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘பிக் பாஸ்’ தற்போது அதன் 9-வது சீசனுடன் தொடங்கியுள்ளது.

2017-ல் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் 7 சீசன்கள் வரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகியதையடுத்து, கடந்த 8-வது சீசனில் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பொறுப்பேற்றார்.

இப்போது, பிக் பாஸ் சீசன் 9 இன்று (அக்டோபர் 5) முதல் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த சில மாதங்களாகவே போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன.

இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக விஜய் சேதுபதியின் மேடைக்கு வந்து அறிமுகமானனர். வழக்கம்போல, ஒவ்வொருவரையும் பற்றிய குறுந்தகடுகள் (இன்ட்ரோ வீடியோக்கள்) ஒளிபரப்பப்பட்டன.

🏠 பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல்:

  • திவாகர்
  • ஆரோரா சின்க்ளேர்
  • எஃப்ஜே
  • விஜே பார்வதி
  • துஷார்
  • கனி
  • சபரி
  • பிரவீன் காந்தி
  • கெமி
  • ஆதிரை
  • ரம்யா ஜோ
  • கானா வினோத்
  • வியானா
  • பிரவீன்
  • அகோரி கலையரசன்
  • கமருத்தீன்
  • ‘விக்கல்ஸ்’ விக்ரம்
  • நந்தினி
  • அப்சரா
  • சுபிக்‌ஷா

புதிய சீசனுடன் புதிய முகங்கள், புதிய டாஸ்க்கள், அதே அளவிலான சர்ச்சைகளும் உணர்ச்சி பூர்வ தருணங்களும் பார்வையாளர்களை கவரப்போகின்றன என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box