தசரா பண்டிகைக்காக மாமியார் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு 100 வகை உணவுகளுடன் விருந்து!

தெலங்கானாவில் தசரா பண்டிகையை முன்னிட்டு மாமியார் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு 100 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து அளிக்கப்பட்டது. அதோடு, மருமகனுக்கு ஒரு சவரன் நகையும் பரிசாக வழங்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தைச் சேர்ந்த சிந்து, வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு நவராத்திரி மற்றும் தசரா பண்டிகை வந்ததால், பெண் வீட்டார் புதுமண தம்பதியினரை கொத்தகோட்டாவிற்கு வர அழைத்தனர்.

அதன்படி சுரேஷ்–சிந்து தம்பதியினர் மாமியார் வீட்டிற்கு வந்தபோது, உற்சாக வரவேற்பும், பண்டிகை விருந்தும் காத்திருந்தது. மருமகனுக்காக 101 வகையான உணவுகள் சமைத்து விருந்து வைப்பதாக மாமியார் முன்பே உறுதி அளித்திருந்தார். இதற்கு நகைச்சுவையாக, “ஒரு வகை குறைந்தால் ஒரு சவரன் நகை பரிசு கொடுக்க வேண்டும்!” என்று மருமகனும் நிபந்தனை விதித்திருந்தார்.

விருந்தின் போது மாமியார் 60 இனிப்பு வகைகள், 30 அரிசி மாவு வகைகள் (முறுக்கு, சீடை, அதே போன்றவை), மேலும் 10 வகையான பொறியல் வகைகள் என மொத்தம் 100 வகையான உணவுகளை பரிமாறினார்.

பின்னர், “101 வகை” என்ற எண்ணிக்கை பூர்த்தி ஆகாததால், மருமகனுக்கு ஒரு சவரன் நகை பரிசாக வழங்கப்பட்டது.

இந்த இனிமையான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, “இப்படி ஒரு மருமகனும் மாமியாரும் வீட்டில் இருந்தால் பண்டிகை தினம் எவ்வளவு இனிமையா இருக்கும்!” என்று நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர்.

Facebook Comments Box