ஆய்வகத்தில் உருவான இதயம், கல்லீரல்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
அமெரிக்காவின் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து, ஆய்வகத்தில் இதயம், கல்லீரல் மற்றும் ரத்த நாளங்கள் போன்ற மனித உறுப்புகளை செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இதற்கான ஆய்வறிக்கை முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
“ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களை பயன்படுத்தி செயற்கை இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் 2017-ம் ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளோம். இதற்குள் 16 நாட்களில் எங்களது ஆய்வகத்தில் செயற்கை இதயம் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கை இதயம், மனித இதயத்தைப் போல துடிக்கிறது.”
அதேபோல, விஞ்ஞானிகள் செயற்கை கல்லீரல் மற்றும் செயற்கை ரத்த நாளங்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆய்வின் மூலம், லட்சக்கணக்கான மக்களை மருத்துவ ரீதியாக காப்பாற்ற முடியும் என்றும், இந்த ஆராய்ச்சி மனிதஉறுப்பு மாற்றும் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.