யார் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்? – டெக் உலகின் ரியல் கேம்சேஞ்சர்

‘பெர்ப்ளெக்சிட்டி’ நிறுவனத்தின் 31 வயதான இளம் பில்லியனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். அவரது சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி. டெக் உலகில் இவரின் சாதனை “ரியல் கேம்சேஞ்சர்” என அழைக்கப்படுகிறது.

பிறப்பு மற்றும் கல்வி

  • சென்னையில் பிறந்தார் (1994 ஜூன் 7).
  • பள்ளிப் படிப்பில் இருந்து காட்ஜெட்கள், கோடிங் மற்றும் எலக்ட்ரானிக் பொம்மைகளில் ஆர்வம்.
  • ‘மெட்ராஸ் ஐஐடி’-யில் மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம்.
  • அமெரிக்காவின் யுசி பெர்கலியில் (UC Berkeley) 2021-ல் கம்யூட்டர் சயின்ஸில் முனைவர் பட்டம்; செயற்கை நுண்ணறிவில் புலமை பெற்றவர்.

டெக் நிறுவனங்களில் அனுபவம்

  • ஓபன் ஏஐ, லண்டன் டீப்மைண்ட் உள்ளிட்ட முன்னணி ஏஐ நிறுவனங்களில் பணியாற்றினார்.
  • ஓபன் ஏஐ DALL·E2 ப்ராஜெக்டில் முக்கிய பங்கு; டெக்ஸ்ட் மூலம் படங்களை உருவாக்கும் அம்சத்தை வடிவமைத்தார்.

பெர்ப்ளெக்சிட்டி ஏஐ

  • 2022 டிசம்பரில், டெனிஸ் யாரட்ஸ், ஜானி ஹோ, ஆண்டி கோவின்ஸ்கியுடன் நிறுவினார்.
  • உரையாடல் பாணியில் பயனர்களுக்கு ஆழமான, நேரடி பதில்கள் வழங்கும் ஏஐ சேவை.
  • பெர்ப்ளெக்சிட்டி புரோவிற்காக சில கட்டணங்கள் இருக்கலாம்; ஆனால் 2024-ல் ஏர்டெல் நிறுவனம் இந்திய பயனர்களுக்கு ஒராண்டு கட்டணமின்றி வழங்கியுள்ளது.
  • மாதந்தோறும் சுமார் 120 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துகிறார். நிறுவன மதிப்பு சுமார் 18 பில்லியன் டாலர்கள்.

பெரும் சாதனைகள்

  • ஆப்பிள், மெட்டா போன்ற நிறுவனங்கள் பெர்ப்ளெக்சிட்டியை வாங்க ஆர்வம் காட்டின; ஆனால் அரவிந்த் சுயாதீனமாக நடத்த தீர்மானித்தார்.
  • 2028க்கு IPO வெளியிடும் திட்டம்.
  • 2024-ல் டைம் இதழின் ‘ஏஐ’ உலகில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களில் ஒருவர்.

வாழ்க்கை முறையும் ஆர்வங்களும்

  • சிலிகான் வேலி மற்றும் சென்னையில் நேரத்தை பிரித்து பணியாற்றுகிறார்.
  • கார்கள், இருசக்கர வாகனங்களில் ஆர்வம்.
  • இந்தியாவில் ஹப்புகளை உருவாக்கும் திட்டங்கள்; ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் திட்டமும்.

31 வயதில் உலக ஏஐ கவனத்தை ஈர்த்து, டெக் உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தான்.

Facebook Comments Box