நடிகர் அஜித்துக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து
நடிகர் அஜித் குமார் ஸ்பெயினின் அண்டலூசியாவில், மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய Mahindra Formula E Gen 2 ஸ்போர்ட்ஸ் காரை ஓட்டி அசத்தியுள்ளார். இதனையடுத்து, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சினிமா மட்டுமின்றி கார் பந்தயத்திலும் ஆர்வம் காட்டும் அஜித், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதன்பின், மஹிந்திரா ஃபார்முலா E Gen 2 காரை அவர் சோதனை ஓட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, தனது எக்ஸ் பதிவில், “ஸ்பெயின், ஸ்பீடு மற்றும் ஸ்டைல் – சக்திவாய்ந்த மற்றும் கிளாசிக் கலவையாக உள்ளது. ரேஸிங் டிராக்கில் அஜித் குமாரை பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். உங்களின் அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறோம்” என கூறியுள்ளார்.