ரஷ்ய அதிபர் புதின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 1952-ம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்தார். அவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களைப் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Facebook Comments Box