தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: கிராம் ரூ.11,000-ஐ கடந்தது

தங்கம் விலை இன்று (அக்.8) புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,300-ஐ எட்டியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்தின்படி தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் உள்ளது. செப்.6-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.80,040 ஆக இருந்தது; செப்.23-ம் தேதி இது ரூ.85,120 ஆக உயர்ந்தது. அமெரிக்க அரசு எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியது மற்றும் அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தன. அக்.6-ம் தேதி பவுன் தங்கம் ரூ.89,000-ஐ தொட்டது.

அக்.7-ம் தேதி பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று (அக்.8) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து, ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.167-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,67,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நவராத்திரி தொடங்கி தீபாவளி வரை பண்டிகை காலத்தில் நகை விலை அடிக்கடி புதிய உச்சங்களை தொட்டுவரும் சூழலில், அக்.20 தீபாவளியை ஒட்டி தங்கம் விலை எவ்வளவு உயர்வோ என்று நகை வாங்குவோரில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,400 உயர்ந்துள்ளது.

இந்த வாரம் தங்கம் விலை நிலவரம்:

  • அக்.8 (புதன்) – ஒரு பவுன் ரூ.90,400
  • அக்.7 (செவ்வாய்) – ஒரு பவுன் ரூ.89,600
  • அக்.6 (திங்கள்) – ஒரு பவுன் ரூ.89,000
Facebook Comments Box