‘பாகுபலி: தி எபிக்’ படத்தில் சில ஆச்சரியங்கள்: தயாரிப்பாளர் விவரிப்பு
‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ படங்களை ஒன்றாக இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் அக்டோபர் 31-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. இதன் பணிகள் ராஜமௌலி மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. இதன் முடிவில் ‘பாகுபலி 3’ படத்துக்கான அறிவிப்பு வரும் என்று தகவல்கள் பரவின.
இதனைப் பற்றிய விளக்கமாக தயாரிப்பாளர் ஷோபு கூறியதாவது:
“‘பாகுபலி 3’ அறிவிப்பு ‘பாகுபலி: தி எபிக்’ முடிவில் இடம்பெறாது. ஆனால் வேறு சில ஆச்சரியங்கள் இருக்கலாம், ஆனால் அவை ‘பாகுபலி 3’ உடன் தொடர்புடையவை அல்ல. 3-ம் பாகத்திற்காக இன்னும் பல பணிகள் செய்யப்படவேண்டும்.
பாகுபலி உலகில் சொல்ல வேண்டிய கதைகள் நிறைய உள்ளன. இவ்வகை மறு வெளியீடு ஒருமுறை மட்டும் நடக்கும் விஷயம் அல்ல. ஆனால், இதை ‘பாகுபலி’ இரண்டாம் கட்டத்தின் தொடக்கம் எனக் கருதலாம். உலகத்தில் இன்னும் சொல்லக் கூடிய கதைகள் ஏராளமாக உள்ளன என்று நம்புகிறேன்.”
மேலும், முதலில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பதாக வெளியான தகவல் தொடர்பாக கேள்வி வந்தபோது, தயாரிப்பாளர் ஷோபு கூறியதாவது: “‘பாகுபலி’ படத்தில் நடிப்பதற்கு யாரையுமே அணுகவில்லை. கதை முழுக்க பிரபாஸ் நடிப்பதற்காக எழுதப்பட்டது.”
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ படங்கள் உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.