‘விளையாட்டு மைதானத்தில் மீதமுள்ள நாட்களை அனுபவிக்க விரும்புகிறேன்’ – ரொனால்டோ
ப்ளூம்பர்க் தரவுகளின்படி, பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கடந்த முதல் கால்பந்தாட்ட வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ அறியப்படுகிறார். தற்போதைய அவரது மொத்த சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
40 வயதான ரொனால்டோவின் சொத்து மதிப்பை உயர்த்தியது முக்கியமாக அல்-நஸர் கிளப் அணியுடன் கையெழுத்தான ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் உறுதி செய்யப்பட்டு, அதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் டாலர் என தகவல். 2023 வரை சம்பளத்தினால் அவர் 550 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளார். மேலும், நைக் நிறுவனத்துடன் 10 ஆண்டுகால ஒப்பந்தம் மூலம் 18 மில்லியன் டாலர் மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து 175 மில்லியன் டாலர்களையும் அவர் பெற்றார் என ப்ளூம்பர்க் கூறுகிறது.
“கால்பந்தாட்டத்தின் மீதான ஆர்வம் இன்னும் எனக்குள் உள்ளது. என் குடும்பம் ஓய்வு எடுக்க வேண்டும் என சொல்கிறது. நான் 900 கோல்களை சாதித்துள்ளேன்; ஏன் ஆயிரம் கோல்கள் என அவர்கள் கேட்கின்றனர். ஆனால், நான் அதை பற்றி இன்னும் நினைக்கவில்லை.
களத்தில் நான் இன்னும் சிறப்பாகவே உணர்கிறேன். என் தேசிய மற்றும் கிளப் அணிகளுக்கு உதவி செய்கிறேன். அப்படி இருக்கும்போது, நான் ஏன் அதை நிறுத்தக் கூடாது? ஓய்வு எடுக்க முடிவு செய்தால், அனைத்து போட்டிகளிலிருந்தும் வெளியேறுவேன். எத்தனை ஆண்டுகள் விளையாடுவேன் என எனக்கு தெரியவில்லை. எனவே, களத்தில் எனக்கு எஞ்சிய நாட்களை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறேன்” என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.