‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை பாராட்டிய இந்திய கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் சமீபத்தில் வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை பார்த்தபோது, ராகுல் கூறியது: “ரிஷப் ஷெட்டி மீண்டும் உருவாக்கிய மாயாஜாலமான ‘காந்தாரா’வை பார்த்தேன். மங்களூரு மக்களின் நம்பிக்கையையும், அழகையும் முழு மனதுடன் பிரதிபலிக்கிறது”.
இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் ருக்மணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து, நல்ல வசூலும் பெற்றுள்ளது.
‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் வசூல் ரூ.400 கோடியை கடந்துள்ளது. ஆரம்பத்தில் குறைந்த வசூல் இருந்தாலும், நாள்தோறும் அதிகரித்து ரூ.400 கோடியைத் தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை ‘காந்தாரா’ படத்துக்கும் தொடர்ந்தது.