கேரளாவில் பால் பண்ணையை பார்வையிட்ட பிரியங்கா காந்தி – “ஆலியா பட்” பசுவுடன் புகைப்படம் வைரல்
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியில் உள்ள ஒரு குடும்ப பால் பண்ணையை காங்கிரஸ் தலைவி மற்றும் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி நேற்று பார்வையிட்டார்.
பால் பண்ணையைப் பார்வையிட்ட பிறகு, ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மிக அழகான குடும்ப பால் பண்ணைக்கு சென்றேன். அங்குள்ள பால் பண்ணையாளர்களை சந்தித்தேன். (அதோடு ‘ஆலியா பட்’ என்ற பெயருடைய பசுவையும் சந்தித்தேன்! பாலிவுட் நடிகை ஆலியா பட் மன்னிக்க வேண்டும் — ஆனால் அந்த பசு உண்மையிலேயே அழகாக இருந்தது!)” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ஆலியா பட்-ஐ டேக் செய்து இதனை பதிவிட்ட பிரியங்கா, தனது பயணத்தின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “துரதிருஷ்டவசமாக பால் பண்ணை விவசாயிகள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். கால்நடை மருந்துகளின் விலை உயர்வு, போதுமான காப்பீட்டு பாதுகாப்பின் இல்லாமை, தரமான கால்நடை தீவனத்தை பெறுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.