நயன்தாரா – கவின் கூட்டணி ‘ஹாய்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் கவின் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஹாய்’ என பெயரிடப்பட்டுள்ளது.
விஷ்ணு எடவன் இயக்கும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தன. சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தாமதம் ஏற்பட்டது. தற்போது அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு, படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
முதலில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வந்த இப்படத்தில், தற்போது தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்களும் இணைந்து தயாரிப்பாளர்களாகச் சேர்ந்துள்ளனர். தீபாவளிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குனர் விஷ்ணு எடவன், முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவர். தனது முதல் இயக்குநர் முயற்சியாக இருக்கும் ‘ஹாய்’ குறித்து அவர் கூறியதாவது:
“முழுக்க முழுக்க குடும்பத்துக்கேற்ற பொழுதுபோக்குப் படம் இது. உண்மையான காதலையும் அழகாகப் பேசும் கதை அமைப்பாக உருவாகி வருகிறது.”