அனைத்து குடும்பங்களுக்கும் அரசு வேலை: பிஹாரில் தேஜஸ்வி யாதவின் வாக்குறுதி

243 தொகுதிகளை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்த சூழலில் ஆர்ஜேடி தலைவர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தலைநகரான பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அரசு வேலை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவோம். எங்கள் அரசு பதவியேற்ற 20 நாட்களுக்குள் இதற்கான சட்டம் இயற்றப்படும். அடுத்த 20 மாதங்களுக்குள் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்,” என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box