சிவகார்த்திகேயன் படம் வித்தியாசமாக இருக்கும் – வெங்கட்பிரபு

அடுத்ததாக இயக்கவிருக்கும் சிவகார்த்திகேயன் படத்தைப் பற்றி இயக்குநர் வெங்கட்பிரபு புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

‘கோட்’ படத்துக்குப் பிறகு, சிவகார்த்திகேயனை கதாநாயகனாகக் கொண்டு தனது அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக வெங்கட்பிரபு உறுதிப்படுத்தியுள்ளார். நண்பரின் வீடியோவில் அவர் கூறியதாவது:

“சிவகார்த்திகேயனுடன் அடுத்த படத்தை இயக்கப் போகிறேன். இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கிறேன். இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் இணையும் இந்த புதிய படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் முடிவாகவில்லை. தயாரிப்பு பணிகள் வேகமெடுக்கும் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் தற்போது ‘பராசக்தி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதைத் தொடர்ந்து ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

இவை முடிந்த பின் வெங்கட்பிரபு படத்தை தொடங்குவாரா, அல்லது இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் பணியாற்றுவாரா என்பது விரைவில் தெரியவரும்.

Facebook Comments Box