இன்டெல் மணி ரூ.300 கோடிக்கு கடன் பத்திரம் வெளியீடு

இன்டெல் மணி நிறுவனம் தனது 6வது பாதுகாக்கப்பட்ட, திரும்பப் பெறத்தக்க, மாற்ற இயலாத கடன் பத்திரங்களை (NCD) அக்டோபர் 13 முதல் வெளியிடுகிறது. இந்த வெளியீடு அக்டோபர் 28 வரை முதலீட்டிற்காக திறந்திருக்க உள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் செயல் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான உமேஷ் மேனன் கூறியதாவது:

“பிணையுறுதி பெற்ற மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் ஒவ்வொன்றும் ₹1,000 முகமதிப்புடன் வெளியிடப்படுகின்றன. இதன் அடிப்படை வெளியீட்டு அளவு ₹150 கோடி. கூடுதலாக ₹150 கோடி வரை அதிகப்படியான சந்தாவை தக்கவைத்துக் கொள்ளும் விருப்பமும் உள்ளது. இதன் மூலம் மொத்தம் ₹300 கோடி வரை நிதி திரட்டப்படும்,” என தெரிவித்தார்.

இந்த கடன் பத்திரங்களுக்கு இன்ஃபோமெரிக்ஸ் ரேட்டிங்ஸ் நிறுவனம் ‘IVR A-/Stable’ என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளது. முதலீடு 72 மாதங்களில் இரட்டிப்பாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 12.25% வட்டி வருவாய் கிடைக்கும்.

மேலும், இந்த கடன் பத்திரங்களை மும்பை பங்குச் சந்தையில் (BSE) பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச முதலீட்டு தொகை ₹10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உமேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box