ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தன்னை வரவேற்ற கலைஞர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
2 நாள் பயணமாக மாஸ்கோ செல்லும் பிரதமர் மோடியை வரவேற்க இந்திய வம்சாவளி மக்களும், ரஷ்ய மக்களும் கூடி, டிரம்ஸ் முழங்க நடனமாடி, பாடல்கள் பாடி வரவேற்றனர்.
மேலும், ரஷ்ய பெண்கள் இந்தி பாடலுக்கு நடனமாடியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தன்னை வரவேற்ற கலைஞர்களை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். அப்போது இசை கலைஞர்கள் பிரதமர் மோடியுடன் குரூப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
Facebook Comments Box