உலக ஆடியோ விஷுவல் & என்டர்டெயின்மென்ட் உச்சிமாநாடு (WAVES) நவம்பர் 20 முதல் 24, 2024 வரை கோவாவில் நடைபெறும்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2024 நவம்பர் 20 முதல் 24 வரை கோவாவில் உலக ஆடியோ விஷுவல் & என்டர்டெயின்மென்ட் உச்சிமாநாடு (வேவ்ஸ்) நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் சிந்தனைத் தலைவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கும் என்று அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் எல். முருகன், இது படைப்பாற்றல் மற்றும் புதுமையின் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை வளர்க்கும் என்றும், இது ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகும் என்றார்.

Facebook Comments Box