பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இதனால் பா.ஜ.க.வுக்கு கூட்டணி கட்சிகள் கடும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில்தான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வந்தது. இந்தக் கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் ஜே.டி.யு., நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தியது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் குழு அறிக்கை 2012ன் படி பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முடியாது என நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று தெரிவித்துள்ளது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ஐக்கிய ஜனதா தளம் மக்களவை உறுப்பினர் ராம்பிரித் மண்டலுக்கு எழுதிய கடிதத்தில், “தேசிய வளர்ச்சி கவுன்சில் சில முக்கிய காரணங்களுக்காக சில மாநிலங்களுக்கு திட்ட உதவிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. மலைப்பாங்கான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு, குறைந்த மக்கள்தொகை அடர்த்தி, பொருளாதாரம் மற்றும் இத்தகைய சிறப்பு அந்தஸ்து, உள்கட்டமைப்பின் பின்தங்கிய தன்மை மற்றும் தேசிய வளர்ச்சிக் குழுவின் தற்போதைய அளவுகோல்களின் அடிப்படையில் போதுமான நிதியை உருவாக்க இயலாமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பீகாருக்கு சிறப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை நிலை, “என்று அவர் கூறினார்

Facebook Comments Box