ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, மாநிலத்தின் சுற்றுலாத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்தார். அதில், அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 8 லட்சம் சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசியலமைப்பின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, திட்டமிட்டு கல்வீச்சு சம்பவங்கள் நடக்கவில்லை என்றும் நித்யானந்த் ராய் கூறினார்.

கடந்த 15ம் தேதி வரை நடந்த தீவிரவாத தாக்குதலில் 10 பாதுகாப்பு படையினரும், 10 பொதுமக்களும் கொல்லப்பட்டதாக நித்யானந்த் ராய் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box