உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் எம்.பி. கெளதம் சிகாமணிக்கு சொந்தமான ரூ.14.21 கோடி சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியுள்ளது.

கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா புதூர் கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியை அரசு ஏலம் எடுத்து அதிக அளவில் செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. அமைச்சர் பொன்முடி மீது முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமாசிகாமணிக்கு சொந்தமான ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் கொட்டப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமலாக்கத் துறை X பதிவு செய்துள்ளது.

Facebook Comments Box