இந்தியா தப்பி வந்துள்ள ஷேக் ஹசீனா டெல்லியில் ரகசிய இடத்தில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

76 வயதான ஷேக் ஹசீனா, வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். இதற்கிடையில், பங்களாதேஷ் நாடாளுமன்றத்தை மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். முன்னதாக பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லியில் உள்ள லஜ்பத் நகரில் ரகசிய இடத்தில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் உடனடியாக இந்தியாவை விட்டு பிரித்தானியா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது இரண்டாவது முறை

இதேபோல், 49 ஆண்டுகளுக்கு முன்பு, ஷேக் ஹசீனா தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்தார்.

வங்காளதேசத்தின் நிறுவனர் மற்றும் முதல் ஜனாதிபதியான ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் 18 பேர் ஆகஸ்ட் 15, 1975 அன்று படுகொலை செய்யப்பட்டனர்.

பின்னர் ஹசீனா தனது கணவர் வாஸ் மாயக், அவரது குழந்தைகள் மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரி ஷேக் ரஹானாவுடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். இவர் பல ஆண்டுகளாக டெல்லி பண்டாரா சாலையில் உள்ள ரகசிய வீட்டில் வசித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Facebook Comments Box