சென்னையை சேர்ந்த பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2,600 சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடத்தப்பட்ட நட்சத்திர ஆமைகளை மலேசியாவுக்கு திருப்பி அனுப்பவும் சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் கடத்தப்பட்ட பயணிகளிடம் இருந்து அனைத்து செலவுகளையும் வசூலிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற குளிர் பிரதேசங்களில் இவ்வகை சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments Box