நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது
நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 23 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறந்த காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் சிறந்த சேவை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஜி கண்ணன், ஐஜி பாபு, போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார், டிஎஸ்பி மனோகரன், டிஎஸ்பி டில்லி பாபு, டிஎஸ்பி சங்கு, ஏஎஸ்பி ஸ்டீபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
Facebook Comments Box