அனைத்துலக மாநாட்டில் சுமார் 1 லட்சம் முருக பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் இன்று கண்காட்சி-நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதன்பின், மாநாட்டு நிகழ்ச்சிகள் துவங்க உள்ளன.

மாநாட்டிற்கு வரும், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனித்தனியாக சுவையான உணவு வழங்கப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 1 லட்சம் முருக பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பழனியில் உலக அளவில் முருகன் மாநாடு நடப்பதால் பழநியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Facebook Comments Box