இந்திய கடலோர காவல்படையினர் இரவு நேர மீட்பு பணியின் போது 11 பேரை மீட்டனர்.

கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​சாகர் தீவில் (மேற்கு வங்கம்) தெற்கே 90 கடல் மைல் தொலைவில் சரக்குக் கப்பல் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல் சென்னை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்தது. கொல்கத்தாவில் உள்ள ஐசிஜியின் பிராந்திய தலைமையகம் (வடகிழக்கு) உடனடியாக இரண்டு ஐசிஜி கப்பல்களையும் ஒரு டோர்னியர் விமானத்தையும் அந்த இடத்திற்கு அனுப்பியது.

டோர்னியர் விமானத்தின் வழிகாட்டுதலுடன், ஐசிஜி கப்பல் சம்பவ இடத்தை அடைந்தது. பின்னர் கடலில் தத்தளித்த 11 பேர் மீட்கப்பட்டனர்.

Facebook Comments Box