குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்தது
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள சோலிடா பகுதியில் பெய்த கனமழையால், போஹாவ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சோலிடா நகரையும், ஹபிஹாசிர் நகரையும் இணைக்கும் பாலம் நேற்று வெள்ளத்தால் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Facebook Comments Box