பழனி அருகே பழுதடைந்த குடிநீர் தொட்டி இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
காப்பான்பட்டியில் ஊராட்சிக்கு உட்பட்ட சேதமடைந்த குடிநீர் தொட்டி இடிக்கும் பணி நடந்தது. கரூர், மணப்பாறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தண்ணீர்த் தொட்டியின் ஒரு பகுதி திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகிய நிலையில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Facebook Comments Box