காவல்கிணறு பகுதியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பணகுடி அருகே திருநங்கைகள் சிலர் வருவோர் போவரிடம் இடைமறித்து பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதை அந்த வழியாக ரோந்து சென்ற பணகுடி போலீசார் அங்கிருந்து செல்லுமாறு விரட்டியுள்ளனர். இதனால் திருநங்கைகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிறிது நேரத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பணகுடி காவல் நிலையத்திற்கு திரண்டு சென்று கற்களால் வீசி அங்குள்ள பூந்தொட்டிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது போலீசார் அங்கிருந்து அவர்களை விரட்ட முயன்றனர். அப்போது திருநங்கை ஒருவர் ஆடைகளை கலைந்து எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீசார் லத்தி ஜார்ஜ் செய்து அவர்களை அங்கிருந்து விரட்டினர். இதனால் பணகுடி காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருநங்கை ஒருவர் ஆடைகளை கலைந்து எதிர்ப்பு தெரிவித்தார்… நடந்தது என்ன..?!

Facebook Comments Box