பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் உற்சாக வரவேற்பு

0

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உற்சாக வரவேற்பு அளித்தார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் 16வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்நிலையில், ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் சார்பில் கசான் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு அவரை வரவேற்ற இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது, ​​பிரதமர் மோடிக்கு ரஷ்ய பெண்கள் பாரம்பரிய இந்திய பாணியில் வரவேற்பு அளித்தனர்.

அப்போது பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் ரஷ்ய பாரம்பரிய நடனம் ஆடப்பட்டது. அதை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர் மோடி, நடன கலைஞர்களை பாராட்டினார்.

பின்னர், நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்து உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், கசான் நகருக்கு வருமாறு விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here