சின்ன சேஷ வாகனத்தில் கோவிந்தர் பவனி

திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக, நேற்று காலை சின்ன சேஷ வாகனத்தில் கோவிந்தர் பக்தர்களுக்கு அருள்பாலித்து திருவீதி உலா வந்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், கடந்த மாதம் 2ஆம் தேதி காலை, திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் பிரம்மோற்சவத் திருவிழாவிற்கான கொடியேற்றம் ஆகமச் சாஸ்திர விதிகளின்படி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு, பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தேவியருடன் கோவிந்தர் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று, பக்தர்களுக்கு அருள் செய்தார். அதன் தொடர்ச்சியாக, பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை, சின்ன சேஷ வாகனத்தில் கோவிந்தராஜ பெருமாள் திருவீதிகளில் வந்து பக்தர்களை தரிசனம் தந்தார்.

இந்த நிகழ்வின் போது, யானை, குதிரை, காளை போன்ற வாகனங்களும், பல்வேறு நடனக் கலைஞர்களும் நடனமாடியபடி அணிவகுத்தனர். ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். இரவு நேரத்தில் அன்ன வாகனத்தில் கோவிந்தர் எழுந்தருளினார்.

Facebook Comments Box