விருதுநகர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு விசேஷ நாட்களில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் வரும் 6ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

Facebook Comments Box