நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கரூரில் போலி பத்திரம் தயாரித்து 100 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில், ஜாமீன் கோரி விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கரூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Facebook Comments Box