இந்தோனேசியாவில் புதிய இராணுவச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது – போலீசார் தாக்குதல்!
ஜகர்த்தா: இந்தோனேசியா நாடாளுமன்றத்தில் ராணுவத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் சர்ச்சைக்குரிய புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நகரங்களில் பொதுமக்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுரபயா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் தொடங்கிய இந்த எதிர்ப்புப் போராட்டம், போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதும் வன்முறையாக மாறியது. இருதரப்பினரும் இடையே மோதல் ஏற்பட்டதால் நகரத்தில் பதற்றம் நிலவுகிறது.
Facebook Comments Box