உக்ரைன் தலைநகரில் ரஷ்ய தாக்குதல் – இருவர் பலி…!

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ரஷ்யாவின் அழைப்பை நிராகரித்த உக்ரைன், போர் நிறுத்தத்தை அறிவிக்க வலியுறுத்துகிறது.

இதற்கிடையில், உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பதிலடி கொடுக்கும் விதமாக, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Facebook Comments Box